
பாரீஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த உலக முதன்மை வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் இத்தாலியின் லாரன்சோ முசெட்டியை எதிர்கொண்டார்.
போட்டியின் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்று 6(5)-7(7) என ஸ்வரேவ் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது செட்டை 2-6 என எளிதாக இழந்தார்.
முதல் சுற்றில் விளையாடாமல் நேரடியாக 2-வது சுற்றுக்குத் தகுதிபெற்ற ஸ்வரேவ், நேர்செட் கணக்கில் 0-2 என தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.