
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நாளை தொடங்கும் 16-வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய ஆண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை வேல்ஸையும், பெண்கள் அணி நாளை மறுநாள் சீனாவையும் எதிர்கொள்கின்றன.
சமீபத்தில் நேஷன்ஸ் கோப்பையை வென்ற உற்சாகத்தில் உள்ள இந்திய பெண்கள் அணி, இந்த முறை முதல்முறையாகப் பதக்கம் வெல்லும் என கோல்கீப்பர் சவிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.