
நடிகர் கிருஷ்ணா தனது 25-வது படமான 'மர்டர் இன் டவுன்' திரைப்படத்தில் காவல் அதிகாரியாக முதன்முறையாக நடித்துள்ளார்.
பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த குற்றப் புலனாய்வு திரில்லர் படத்தில், பிந்து மாதவி கதாநாயகியாகவும், ஆர்.பாண்டியராஜன் மற்றும் சின்னி ஜெயந்த் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இதேபோல் 'மக்கள் காவலன்' என்ற படத்தில் மணிகண்டனும் காவல் அதிகாரி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.