
விஜய்யின் ‘கில்லி’ திரைப்படத்தில் வில்லன் கூட்டத்தில் ஒருவராக நடித்து பிரபலமான நடிகர் கில்லி சிவா திடீரென உயிரிழந்துள்ளார்.
கில்லி படத்தில் விஜய்யுடன் அவர் பேசிய ‘இந்த இடம் எங்க ஏரியா’ என்ற வசனம் ரசிகர்களிடையே அவரைப் பெரும் பிரபலமாக்கியது.
கில்லி மட்டுமின்றி மதுர, குருவி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த சிவாவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.