
டிஎன்பிஎல் டி20 தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்துள்ளது.
மோஹித் ஹரிஹரன் 50 பந்துகளில் 108 ரன்கள் விளாசியும், நாராயண் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தும் அசத்தினர்.
மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற 241 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயித்துள்ளது.