
தமிழக சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அமைச்சர்கள் இடையே நடந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சியினரின் ஊழல் ஆதாரங்கள் தன் மேஜையில் இருப்பதாக முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார்.
நிதி அமைச்சர் மரிய வில்சன் மூன்று துறைகளை ஆய்வு செய்து கொடுத்த கோப்புகள் தன்னிடம் ஆதாரங்களுடன் தயாராக இருப்பதாகவும், அவற்றை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பேன் என்றும் முதல்வர் விஜய் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஐ. பெரியசாமி, தான் ஒரே தொகுதியில் ஒன்பது முறை போட்டியிட்டு, மக்கள் அளித்த அங்கீகாரத்தால் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளதாகப் பேரவையில் தெரிவித்தார்.