
சன்னி லியோன் மீது ஓம்பிரகாஷ் ஸ்ரீநாராயண் லால்ஜெயின் என்பவர் தொடர்ந்த மோசடி வழக்கை மும்பை திண்தோஷி கூடுதல் செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தந்ததற்கு கமிஷன் தரவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு நிராகரிக்கப்பட்டது.
இது இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பான வணிக ரீதியான பணப்பரிவர்த்தனை பிரச்சினை மட்டுமே என நீதிபதி பி.ஏ.சானே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.