
39 வயதான லியோனல் மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து ஓய்வு முடிவு முற்றிலும் அவரது தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினா அணிக்காக 125 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, 2022 ஃபிபா உலகக் கோப்பையை வென்று கொடுத்ததோடு, 2014 மற்றும் 2026 தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
2030-ல் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பை தொடரின் போது மெஸ்ஸிக்கு 43 வயது இருக்கும் நிலையில், அவர் விளையாடுவது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.