
விமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில் விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) அரசு குறைத்துள்ளது.
ஆனால் பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், வழக்கமான கட்டணம் உயர்ந்து சில வழித்தடங்களில் ரூ.14,000 முதல் ரூ.18,000 வரை எட்டியுள்ளதாக கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வரிக் குறைப்பால் மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு மற்றும் பயணிகளுக்குக் கிடைத்த நேரடிப் பயன் என்ன என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.