Education
திருச்சி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு

திருச்சி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு

Vikatan2h
THE BRIEF
1

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புனித மரியன்னை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் ஜெயராஜ் மீது புகார் எழுந்துள்ளது.

2

சம்பவம் குறித்து அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில், தலைமை ஆசிரியர் ஜெயராஜ் பள்ளியின் பின்புற வழியாகத் தப்பி ஓடி தலைமறைவானார்.

3

சமயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய தலைமை ஆசிரியரைத் தேடி வருவதோடு, அவரை விரைவில் கைது செய்வதாகப் பெற்றோர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.