
தமிழக வெற்றிக்கழக அரசு, காமராஜர் காலை உணவு திட்டத்தை 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 7,537 பள்ளிகளில் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்; நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ₹217 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர், காந்திகிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.