சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும், மறுமதிப்பீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சொத்து வரி மறுமதிப்பீடு தொடர்பாக மக்கள் மண்டல அலுவலகங்களில் அடுத்த 15 நாட்களுக்குள் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கருத்துகளைக் கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக மேயர் பிரியா குற்றம் சாட்டியுள்ள நிலையில், மாமன்றக் கூட்டத்தில் இது விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.