
இந்திய ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரிகள், சேலம் மாநகரப் பகுதியில் கூகுள் மேப் காட்டிய தவறான பாதையால் வழிதவறின.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் வந்த லாரிகள் குறுகலான குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நகர முடியாமல் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இரவு நேர ரோந்துப் பணியில் இருந்த சேலம் போலீசார் உடனடியாக விரைந்து வந்து, லாரிகளைப் பாதுகாப்பாக மீட்டு சரியான நெடுஞ்சாலைப் பாதைக்கு வழிகாட்டி அனுப்பி வைத்தனர்.