
ரைட்டர் பட இயக்குனர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் அவியேட் பிக்சர்ஸ் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கின்றனர்.
டார்க் ஹியூமர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் ரமேஷ் திலக், தீனா மற்றும் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.