
மேற்குக்கரை பகுதியில் உள்ள குஸ்ரா மற்றும் கூர் கிராமங்களில் பாலஸ்தீன மசூதிகளுக்குத் தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 2 இஸ்ரேலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 24-ம் தேதி நப்லஸ் நகரில் நடந்த மோதலில் 4 பாலஸ்தீனியர்களும் 2 இஸ்ரேலிய வீரர்களும் உயிரிழந்ததற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மசூதிகள் மட்டுமின்றி பாலஸ்தீனியர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.