
கர்நாடக அரசு சமர்ப்பித்த மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர்வள ஆணையம் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
பெங்களூரு குடிநீர் தேவைக்கான நீரின் அளவை 4.75 டி.எம்.சி-யிலிருந்து 6.95 டி.எம்.சி-யாக உயர்த்தியது மற்றும் சிவனசமுத்திரா புனல்மின் திட்டத்தை இணைத்தது போன்ற மாற்றங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க திட்டத்தைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.