
ஈரான் போரில் அமெரிக்கா மிக விரைவில் வெற்றி பெறும் என்றும், போர் முடிந்தவுடன் பணவீக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
ஒவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும், நவம்பர் மாத இடைத்தேர்தலுக்கு முன்னர் மேலும் அமெரிக்கத் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவை நோக்கி ராக்கெட்டுகளும் குண்டுகளும் வருவதைத் தடுப்பதற்காகவே தான் போருக்குச் சென்றதாக அவர் கூறினார்.