
முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் அனயா எனப் பெயர் மாற்றம் செய்து, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பிக் பாஷ் உள்ளிட்ட முதன்மையான போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அனயாவின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு ஓராண்டுக்கு 10 நானோமோல் லிட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர் பூர்த்தி செய்துள்ளதால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.