/nakkheeran/media/media_files/2026/09/27/cm-vijay-sad-3-2026-09-27-21-12-07.jpg)
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 110 பேர் வரை காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இறந்த 41 பேரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே இன்று நடைபெற்றது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ இந்த வழக்கைத் விசாரித்து வரும் நிலையில், தவெக மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் இறந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.