
ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் 252.4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ஹிமான்ஷு தில்லான், ருத்ராங்க் ஷ் பாட்டீல், பார்த்த் மானே அடங்கிய இந்திய அணி 1890.1 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான பாட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.