
ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்த வெற்றி இந்தியாவிற்குப் பதக்கப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளதோடு, வீராங்கனைகளின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.