
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை தருவதாகக் கூறி மோசடி நடந்துள்ளது.
இந்த மோசடி நபரை நம்பி 3 பெண்கள் மொட்டை அடித்துக்கொண்ட நிலையில், அந்த நபர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார்.
மொத்தம் 20 பேர் மொட்டை அடிக்கத் தயாரான நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.