
பிரேசிலின் பரானா மாகாணத்தில் இன்று அதிகாலை பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.
லிபிடுவா நகரில் இருந்து பண்டா கிராசா நகருக்கு 28 பயணிகளுடன் சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் காயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.