
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'பத்தா' திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அட்லி தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், மேலும் இது விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் இணையும் மூன்றாவது திரைப்படமாகும்.
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியிடப்பட்ட நிலையில், இதில் விஜய் சேதுபதி வின்டேஜ் லுக்கில் இடம்பெற்றுள்ளார்.