
எம்.எஸ். பாஸ்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'விடியும் காத்திரு' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
இயக்குநர் ஆர். அரவிந்த ராஜன் இயக்கும் இப்படத்தில் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்கு செல்லும் அதிகாரிகளுக்கு ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.