
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 54-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்களுக்காக 4,230 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
செப்டம்பர் 8-ம் தேதி அன்னை மாதாவின் பிறந்த நாளையொட்டி அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்புத் திருப்பலிகள் நடைபெற உள்ளன.