
நியூசிலாந்துக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 'ஏ' அணியின் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் 199 ரன்கள் விளாசினார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன் இணைந்து படிக்கல் 215 ரன்கள் சேர்த்த நிலையில், சாய் சுதர்சன் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆட்டநேர முடிவில் இந்தியா 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 488 ரன்கள் எடுத்து 284 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.