
ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை பவானி தேவி, சேபர் பிரிவில் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணியின் பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்கி செப்டம்பர் 15 வரை நடைபெறுகிறது.