
புதுச்சேரியில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் கொசு உற்பத்தியை தடுப்பது தொடர்பான அவசர உயர்நிலைக் கூட்டம் சட்டசபையில் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் டெங்கு பரவல் தற்போது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.
மழைக்கு ஒரு வாரத்திற்கு முன் மருந்து தெளிப்பது மற்றும் ஆஷா ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பார்வையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.