
டெல்லியில் நடக்கும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் காயத்ரி-திரீசா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய ஜோடி 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜியா யி பேன்-ஷு ஜியான் ஜாங் ஜோடியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலக பாட்மின்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம் உறுதியாகியுள்ளது.