
30 வயதைக் கடந்த ஆண்கள் புகைபிடித்தலை முற்றிலும் நிறுத்துவதுடன், தினசரி நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச் சத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை அல்லது திடீர் மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை சாதாரணமாகக் கருதாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.