
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயது பெண் கிறிஸ்டினா ரப்தி, கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்த தனது மகனின் நினைவாக புதிய குழந்தையைப் பெறத் திட்டமிட்டார்.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு (2004-ல்) உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட தங்களது சொந்தக் கருவை செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கருப்பையில் செலுத்தினர்.
அரசாங்கத்தின் கடுமையான கெடுபிடிகளையும் தாண்டி மருத்துவர்களின் முயற்சியால் கிறிஸ்டினா கர்ப்பமடைந்து, தற்போது 3½ கிலோ எடையில் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றுள்ளார்.