
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா, இத்தாலியைச் சேர்ந்த இசாய் என்பவரை கடந்த 19ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் சுமார் 14 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இத்தாலியில் வைத்து இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருமணம் தொடர்பான புகைப்படங்களை அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து, பலரும் புதுமணத் தம்பதிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.