சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை வரும் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
அன்று சென்னை வரும் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டு, ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
இந்திய இசையின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்காக கடந்த 2024ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.