
வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆரம்பத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அறிமுக வீரர் கெவின் விக்ஹாமுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அமிர் ஜாங்கூ, 149 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.