
முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சொத்து விவரங்களை ஆடிட்டர் உதவியுடன் தாக்கல் செய்ததில் ஏற்பட்ட தவறு தேர்தல் வெற்றியை ரத்து செய்யப் போதுமானதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விஜய் தனது வேட்புமனுவில் ரூ.600 கோடி சொத்துகளைக் குறிப்பிட்ட நிலையில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விடுபட்டது வாக்காளர்களைப் பாதித்ததா என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் வினவினார்.
விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்து விவரங்களில் ஏற்பட்ட தவறுகள் தேர்தல் முடிவைப் பாதிக்கவில்லை என வாதிட்ட நிலையில், வழக்கு அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.