
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை மற்றும் சிறையில் அவருக்கு அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து செப்டம்பர் 27 அன்று இஸ்லாமாபாத் நோக்கிப் பேரணி நடைபெறவுள்ளது.
பிடிஐ தலைவர் சோஹைல் அஃப்ரிடி, இந்தப் பேரணியில் 20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அறிவித்துள்ள நிலையில், இம்ரான் கானின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவி வருகின்றன.
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலாவில் தனிமைச் சிறையில் உள்ள இம்ரான் கானைச் சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.