
திபெத் மற்றும் நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி திபெத்தில் 558 பேர் மாயமாகியுள்ள நிலையில், சீன பிரதமர் லீ சியாங் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்த பேரிடரால் திபெத்தில் 3 பேரும், நேபாளத்தில் 359 பேரும் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக ஐ.நா. 20 லட்சம் டாலர் நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது.
வெள்ளத்தால் உருவான பிரம்மாண்ட ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.