
சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஆளுங்கட்சி அமைச்சர்கள் அவையில் பாட்டு பாடுவதையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் சுட்டிக்காட்டி, அவை நிகழ்ச்சிகள் நேரலையில் செல்வதை விமர்சித்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படுவதாகவும், கோப்புகள் குறித்த விசாரணை அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.