
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தான் நடிக்க வந்ததை எதிர்த்து தனது தாய் வாட்ஸ்அப்பில் தன்னை பிளாக் செய்ததாகவும், ஆறு மாதங்கள் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மானின் 'காந்தா' படம் மூலம் தமிழில் அறிமுகமான பாக்யஸ்ரீ, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார்.
தனது 80 வயதில் வருத்தப்படக்கூடாது என்ற எண்ணத்தில்தான் குடும்ப எதிர்ப்பையும் மீறி நடிப்பைத் தொடர்ந்ததாக அவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.