
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நான்கு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 418 முகாம்களில் 18,434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், கோழிக்கோடு - வயநாடு மற்றும் கண்ணூர் - வயநாடு மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.