
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
நரைனின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் சென்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.