
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட 79,000 வழக்குகளை முடிக்க, அந்நிறுவனம் சுமார் ரூ.53,000 கோடி ($5.5 பில்லியன்) வழங்க முன்வந்துள்ளது.
இந்தத் தொகையைப் பெற 95 சதவீத வழக்காளர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தச் சமரச ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் தயாரிப்பில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்று மறுக்கும் ஜான்சன் & ஜான்சன், இது தவறை ஒப்புக்கொள்வதல்ல, வழக்குகளை முடிப்பதற்கான ஒரு ஏற்பாடு என்று கூறியுள்ளது.