
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுகளில் இன்று காலை ரிக்டர் அளவில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு இந்திய நேரப்படி அதிகாலை 8.01 மணியளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து வனுவாட்டு அதிகாரிகள் ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுத்த பின்னர் அதனை ரத்து செய்தனர்.