Economy
பிஎல்எம் நிதி நிறுவனம்: ரூ.5,000 கோடி மோசடி புகாரில் 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பிஎல்எம் நிதி நிறுவனம்: ரூ.5,000 கோடி மோசடி புகாரில் 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி (பிஎல்எம்) நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மோசடி புகாரைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.

2

பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தை நிறுவன அதிபர் பிரேம்குமார் தனது உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதுடன், நிலங்கள் மற்றும் ஹோட்டல்களில் முதலீடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

3

கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பிரேம்குமார் தொடர்பான இடங்களில் கொச்சி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக்கைப்பற்றியுள்ளனர்.