
காசா மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வைத்துள்ள புதிய அமைதி திட்டத்தை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன.
ஹமாஸ் மற்றும் பிற கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளன.
ஹமாஸ் போர் பாதையிலிருந்து வெளியேறுவதால் காசா நிர்வாகத்தை பாலஸ்தீனிய குழு ஏற்கும் என்றும், இதைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.