
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 24,23,201 வாகனங்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 17.51 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஃபடா அமைப்பு தெரிவித்துள்ளது.
பயணிகள் வாகன சந்தையில் மாற்று எரிபொருள் வாகனங்கள் 41.95 சதவீத பங்கை எட்டி, முதன்முறையாக பெட்ரோல் வாகனங்களின் விற்பனையை (40.85 சதவீதம்) முந்தி சாதனை படைத்துள்ளன.
கிராமப்புறங்களில் பயணிகள் வாகன விற்பனை 24.99 சதவீதமும், வணிக வாகன விற்பனை 16.33 சதவீதமும் அதிகரித்துள்ள நிலையில், செப்டம்பர்-நவம்பர் பண்டிகை காலத்தில் 81.62 சதவீத விற்பனையாளர்கள் கூடுதல் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர்.