
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கிடையே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்து மதத் தலைவர் சுவாமி சதீஷாச்சார்யாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது குனிந்தது போன்ற வீடியோ பரவியது.
ஈரான் அதிபர் இந்து மத தலைவரின் காலைத் தொட்டு ஆசி பெற்றதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், அது தவறு என ஈரான் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
தன்னிடம் கொடுக்கப்பட்ட கடிதம் கீழே விழுந்ததால் அதை எடுக்கவே அவர் குனிந்ததாக ஈரான் தூதரக வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.