
சசிகுமார் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வதந்தி 2' வெப் தொடர் இன்று முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் அனாகா, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் தொடரின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்ட சமுத்திரக்கனி, சசிகுமாரின் காவல் அதிகாரி கதாபாத்திரம் மற்றும் இஸ்லாமிய சமூக சித்தரிப்பு குறித்து பாராட்டு தெரிவித்தார்.