Indian Politics
த.வெ.க நிர்வாகி பூபாலன் கைது: ரூ.100 கோடி மெத் போதைப்பொருள் பறிமுதல்

த.வெ.க நிர்வாகி பூபாலன் கைது: ரூ.100 கோடி மெத் போதைப்பொருள் பறிமுதல்

Vikatan1h
THE BRIEF
1

ரூ.100 கோடி மதிப்பிலான கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் த.வெ.க செயற்குழு உறுப்பினர் பூபாலன் உட்பட நான்கு பேரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழரிடம் விசாரணை நடத்தியதில் இந்த வலைப்பின்னல் வெளிச்சத்துக்கு வந்தது.

3

கைது செய்யப்பட்டுள்ள பூபாலனை த.வெ.க கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.